லண்டன்,
இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் (ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள்) இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி பந்துவீச்சு பீல்டிங் இரண்டிலும் சோபிக்கவில்லை. அதிரடியாக விளையாடினாலும், பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியபோதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை.
சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, பந்து வீச்சாளர்கள் 5 பேர், போதிய பேட்டிங் இல்லாதது என பழைய காலத்திலேயே உள்ளது என கூறியுள்ளார்.