நியூசிலாந்தில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா தொற்று

லாகூர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20  வருகிற டிசம்பர் 18ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக நியூசிலாந்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்கள் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இதில் 3-வது நாளில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஏற்கெனவே வெளியான முடிவுகளில் 6 வீரர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அந்த வீரர்கள் தனியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இன்று 7-வது வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபடுவதற்கு நியூஸிலாந்து சுகாதாரத்துறை அளித்திருந்த நிலையில், ஹோட்டலில் கொரோனா தடுப்பு விதிகளைகளை மீறிய அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான அனுமதியையும் நியூஸிலாந்து அரசு ரத்து செய்துள்ளது.

மேலும் விதிமுறைகளை மீறி நடந்தால், நியூஸிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *