ஐபிஎல் அணியில் விட்டதை தேசிய அணியில் பிடித்த மேக்ஸ்வெல் : ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ஞ் 114 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 105 ரன்களும், மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 375 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணியி 66- ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.  நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.  11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் போன்றோர் சாடியிருந்தனர்.

இந்த நிலையில், மேக்ஸ்வெல்  மற்றும் ஜேம்ஸ் நீஷம் இருவரும் சிறப்பாக விளையாடியதை கேஎல் ராகுல் விரக்தியுடன் நின்று பார்ப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியாகி இருந்த்து. இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் நீஷம், உண்மையில் இது மிகவும் நல்ல மீம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த டுவிட்டருக்கு பதிலளித்த மேக்ஸ்வெல், பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கோரி விட்டதாக கூறி ஸ்மைலி-யையும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *