பியூனஸ் அயர்ஸ்,
கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா கடந்த 26-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவு உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரடோனாவின் மறைவையொட்டி அர்ஜென்டினா நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்பட்டது.
மேலும் அர்ஜண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இறுதிச்சடங்குகளுக்குப் பின், அர்ஜென்டினா தேசியக் கொடி போர்த்திய மாரடோனா உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புறநகர் பகுதியில் பெல்லா விஸ்டா கல்லறையில், அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.
பியுனஸ் ஏர்ஸ் சாலையில் இருபக்கங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கால்பந்து ஜாம்பவானுக்கு பிரியா விடை அளித்தனர். மாரடோனா முதல் மனைவி கிளாடியா, மகள்கள் தல்மா 33, கியானினா 31, மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.