களத்தில் அதிக நேரம் நின்ற போட்டி இதுதான் : ஸ்டீவ் ஸ்மித் கருத்து

சிட்னி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில், நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில், 374 ரன்கள் குவித்த்து.

அதிகபட்சமாக சதம் அடித்த கேப்டன் ஆரோன்பிஞ்ச் 114 ரன்களும், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களும் குவித்தனர். இந்திய அணிதரப்பில் ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடாந்து 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நிர்ணையிக்கப்பட்ட கால அளவை விட பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு போட்டி கட்டத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் “ எனக்குத் தெரிந்தவரை 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் அதிகமான நேரம் களத்தில் இருந்தது இந்த போட்டியாகத்தான் இருக்கும்.  முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் பந்தவீசுதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். அதாவது கூடுதலாக 45 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர். அதேபோல, நாங்களும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *