சிட்னி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில், நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணையித்த 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களை வீசுவதற்கு 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர். இதனால் குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
மேலும் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்துக்கு கேப்டன் விராட் கோலி, நேரடியாக விசாரணைக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.