இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – வெளியான புதிய தகவல்

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று புதிதாக 473பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திணைக்களம் தகவல் கூறியுள்ளது . அதனுடன் , திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் மேலும் 472 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த பகுதி கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 963 ஆக கூடியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *