ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர் வருகை படிப்படியாக அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 22.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 மணிக்கு வரிசையில் நின்றவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
