தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் சாஷோ என திரைத்துறையினரால் செல்லமாக அழைக்கப்படும் சச்சிதானந்தம்தான் என சொல்லப்படுகிறது. சினிமா துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்க்ரீப்ட் என பல முகங்களை கொண்டவராம் இந்த சாஷோ. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் கலக்கி வருகிறாராம் .
