தெலுங்கு திரையுலகின் பிரபல பாடகி சுனிதா. இவர் தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் விஜய் நடித்த பத்ரி படத்தில் இடம்பெறும் காதல் சொல்வது உட்பட பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இவர் சின்ன வயதிலேயே திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் . இந்நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றது . இப்போதும் சமூக வலைதளங்களில் அந்த வகையில் தகவல் பரவியுள்ளது. ஆயினும், அதை அவர் மறுத்துள்ளார்.
