பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் ரேகாவில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சுச்சி வரைக்கும் தொடர்ந்து பிக் பாஸ் எலிமினேஷன் கசிந்து கொண்டு வருகிறது. இந்தவேளையில் , இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்கிற தகவலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக பிக்பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்த ஜித்தன் ரமேஷ் தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறவிருப்பதாக தெரிகிறது
