நவம்பர் 28 : வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்
1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார். 1660 – கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர். 1814 – இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது. 1821 – பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. 1843 – அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன. 1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
Read More