டெஸ்ட் தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்மித்தின் செயல்பாடு எப்படி?

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மார்னஸ் லாபஸ்சேன் அசுர ஃபார்மில் உள்ளார். இவர்கள் மூன்று பேரும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக திகழ்வார்கள்.

இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்மித் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இஷாந்த் சர்மாவுக்கு எதிராக 176 சராசரி வைத்துள்ளார். அஸ்வினுக்குத் எதிராக 116 சராசரி வைத்துள்ளார். முகமது ஷமிக்கு 112 சராசரி வைத்துள்ளார். உமேஷ் யாதவுக்கு எதிராக 65.50 சராசரி வைத்துள்ளார். ஜடேஜாவுக்கு எதிராக 37.80 சராசரி வைத்துள்ளார். ஆனால் பும்ரா பந்து வீச்சை இதுவரை எதிர்கொள்ளவில்லை. ஸ்மித்திற்கு கடும் சவாலாக பும்ரா இருக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!