தற்போது கொரோனா அதிகளவில் பரவியதற்கு காரணத்தை கண்டுபிடித்த முக்கிய அமைப்பு

கடந்த பல மாதங்களாக உலகளவில் எந்த விதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கொரோனா நோயாளிகளே அதிகளவில் கொரோனா பரவியதற்கு காரணம் என அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது . கொரோனா வைரஸ் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து முகக்கவசம் அணிவது உலகளவில் மிக கட்டாயமானது என்று அதன் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் . கொவிட் 19 உள்ளிட்ட அனைத்து வைரஸ் பரவல்களும் அறிகுறியற்ற தொற்றுநோய்களின் மூலமாக ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதனுடன் , அனைத்து தொற்று நோய்களிலும் 50 சதவீதமானவை அறிகுறிகள் இன்றியே ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெரும்பாலானவர்களுக்கு பரவுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!