இயற்பியல் விஞ்ஞானி நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் பிறந்த தினம் நவம்பர் 21

சர்.வி.வி ராமன்

சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.
சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார்.
இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட். இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் (நவ.21) இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். தன்னுடைய கடைசி காலத்தில் இவரே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!