நவம்பர் 21 : வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

கிமு 164 – மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

235 – போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1386 – சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான்.

1676 – தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது  கண்டுபிடித்தார்.

1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!