சிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்

லாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு ஆரோக்கியமும், கட்டுக்கோப்பும் கிடைக்கும். சிரிப்பு யோகா இதயத்திற்கு வலுசேர்க்கும் பயிற்சியாகவும் அமைகிறது. 10 நிமிடங்கள் இந்த யோகாசனத்தை மேற்கொண்டால் அரை மணி நேரம் சைக்கிளிங் செய்வதற்கான பலன் கிடைக்கிறது.

– உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆஸ்துமா, அலர்ஜி, வாதநோய்கள் குறையும். உடல் இறுக்கமும், மன அழுத்தமும் குறையும். உடலுக்கு நிம்மதியை தரும் எண்டோர்பின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நேர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகும். மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!