மகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரத்து 760 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 5 ஆயிரத்து 760 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 74 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 88 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 47 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!