கொரோனா இன்னும் முடிந்துவிடவில்லை. நடிகை சுருதிஹாசன்

இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் முககவசம் அணியவும் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கொரோனா அபாயம் முடிந்து விடவில்லை. கொரோனா பரவலை தடுக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதனை பின்பற்றாவிட்டால் ஒரு தனிநபராகவோ, நடிகையாகவோ எனது ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் முன்னுரிமை அளிப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.

கொரோனா வைரஸ் அனைவரின் ஆரோக்கியத்திலும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனை எனது கருத்தாக தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!