இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க முடிவு செய்த கமல்ஹாசன்?

தொடக்கத்தில் இருந்தே பல தடைகளை கடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு, கிரேன் சரிந்து உயிரிழப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதன்பிறகு இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியபோது, கொரோனாவும் படப்பிடிப்பை முடக்கி போட்டது.

இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டது. இயக்குனர் ஷங்கரும் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாகவும் பேசினர்.

ஆனால் இந்த தகவலை மறுத்த தயாரிப்பு நிறுவனம் இந்தியன்-2 படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் விக்ரம், இந்தியன்-2 ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!