பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூட்டாளிகளுக்கு சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லமபாத்,

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான சயீத்தைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும் ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காரணமான சயீத் மீது பாகிஸ்தான் மென்மையான போக்கை கையாண்டு வருகிறது.  இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஹபீஸ் சயீத்துக்கு வேறு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான்   நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து ஹபீஸ் சயீத் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மேலும் ஹபீஸ் சயீத்தின் உதவியாளர்களான முகம்மது அஷ்ரப் மற்றும் லுகமன் ஷா ஆகிய இருவருக்கும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் ஆறு மற்றும் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!