இணையதளத்தில் வைரலாகும் சிம்புவின் மாநாடு பர்ஸ்ட் லுக்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தலையில் புல்லட் பாய்ந்து ரத்த காயங்களுடன் சிம்பு இருக்கும் இந்த போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா எஸ் ஏ சந்திரசேகர் மனோஜ் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!