வாடிக்கையாளர்களுக்கு கொரோனா குறித்து அறிவுரை வழங்கும் ஜப்பான் ரோபோ

டோக்கியோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.2 லட்சமாக உள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு பலி எண்ணிக்கை  2 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது.  பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, ஜப்பானில் பாதிப்புகள் குறைவு என்றபோதும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கடை ஒன்றில் புது வரவாக வந்துள்ள ரோபோவீ என்ற பெயரிடப்பட்ட ரோபோ வாடிக்கையாளர்களுடன் பேசி அசத்தி வருகிறது. கொரோனா தடுப்புக்கான சர்வதேச நடவடிக்கைகளான முக கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விசயங்களை பின்பற்றும்படி கடைக்கு வருவோரிடம் கூறுகிறது.

மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர் முக கவசம் அணியவில்லை எனில், தனது கேமிராவால் கண்காணித்து அவரை நெருங்கி செல்கிறது. சென்று மன்னிக்கவும்.  ஆனால், தயவு செய்து முக கவசம் அணியுங்கள் என்று கேட்டு கொள்கிறது.  வாடிக்கையாளர் முக கவசம் அணிவது கேமிராவை கொண்டு கண்காணிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!