நான் இறந்தாலும் பாஜகவில் சேரமாட்டேன் – சௌகதா ராய் எம்.பி.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேற்குவங்காளத்தை சேர்ந்த பாஜக எம்.பி. அர்ஜூன் சிங், ’சௌகதா ராய் உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் அவர்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூடிய விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக சௌகதா ராய் கூறுகையில், பாஜக எம்பி அர்ஜூனின் கருத்துக்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் ஈடுபடுவதில் அர்ஜூன் ஒரு பாகுபலி. அர்ஜூன் பொய்களை மட்டுமே பேசி வருகிறார். நானும் பாஜகவில் இணைய வரிசையில் நிற்பதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நான் கூறுவது என்னெவென்றால் நான் இறந்தாலும் பாஜகவில் சேரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!