இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே… அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுஷ்கா, அருந்ததி என்ற வரலாற்று படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து  இஞ்சி இடுப்பழகி, பாகமதி பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தவர்.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. மேலும் அனுஷ்காவிற்கு சமீபத்தில் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று படங்கள் வந்ததாகவும், ஆனால் அந்தப் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பிக்காத அனுஷ்கா நிராகரித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் தற்போது அனுஷ்கா வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது நண்பர்கள் படத்திலோ அல்லது தனக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனங்களுடன் மட்டுமே அனுஷ்கா பணிபுரிய விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!