ஸ்ரீகாந்த் – ஆஷிஸ் வித்தியார்த்தி இணையும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படம்

விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஆஷிஸ் வித்தியாத்தி. அதன்பிறகு தமிழில் பல படங்களில் வில்லணாக நடித்த அவர் கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடாந்து ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து அவர் தற்போது, ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில், இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!