இங்கிலாந்து தொழிலாளர் கட்சியில் இருந்து விலகிய மேக்நாத் தேசாய்

லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய மேக்நாத் தேசாய் (80) அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான அவர், பிரபுக்கள் சபையின் உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

தான் பதவி விலகியதற்கான காரணத்தை கூறிய அவர், கட்சிக்குள் தலைதூக்கிய இனவெறியை தடுப்பதில் கட்சி தலைமை தோல்வி அடைந்துவிட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறி உள்ளார். மேலும் தனது ராஜினாமா நடிதத்தை பிரபுக்கள் சபை தொழிலாளர் கட்சி தலைவருக்கு அனுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!