அமெரிக்காவின் விஸ்கான்சின் துப்பாக்கிசூடு திட்டமிட்டு நடந்தது அல்ல : போலீசார் வெளியிட்ட அறிக்கை

வாஷிங்டன்:

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம் வாவடோசா நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 8 பேர் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. வணிக வளாகத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  மேலும் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!