ஓமன் கடலில் மூழ்கிய இலங்கை படகு பத்திரமாக மீட்பு

மஸ்கட்:

இலங்கை நாட்டை சேர்ந்த மரத்திலான படகு ஒன்று காரை ஏற்றிக்கொண்டு மஸ்கட் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ஓமன் கடலில் நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அந்த அந்த படகு தொடர்ந்து பயணம் செய்ய முடியவில்லை.

மேலும் தண்ணீரில் கவிழ்ந்த படகு மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த படகு ஊழியர்கள் ‘மே டே’ எனப்படும் அவசரகாலத்தில் அளிக்கப்படும் சமிக்ஞையை வெளியிட்டனர். அந்த தகவலை பெற்றுக்கொண்ட மஸ்கட் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு குழுவினருடன் தகவல் அனுப்பப்பட்ட இடத்தை நோக்கி சென்றனர்.

ஆனால் அதற்குள் அந்த படகு முழுவதும் மூழ்கும் நிலையில் இருந்தது. உடனடியாக தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்தவர்களை நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் மீட்டு மிதவைகள் மூலம் ஏற்றிக்கொண்டு கரைக்கு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. பின்னர் கடலில் மூழ்கிய படகை பத்திரமாக மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!