ஆப்கானிஸ்தானில் 23 ராக்கெட்கள் ஏவி தொடர் தாக்குதல் : 8 பேர் பலியானதாக தகவல்

காபுல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தோஹா நகரில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் மறுபுறம் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதுலுக்கு உள்நாட்டு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில், ’கிரீன் சோன்’ பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 23 ராக்கெட்கள் ஏவப்பட்டன. இந்த ராக்கெட் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கோர தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!