விஷ சாராயம் குடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அமிலியா கிராமத்தில் மதுக்கடை ஒன்றில் நேற்றிரவு சிலர் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர். இதில், பலரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. மேலும், அவர்களில் 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுக்கடையை நடத்தி வரும் கணவன் மற்றும் மனைவி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தர பிரதேசத்தின் லக்னோ, பிரோசாபாத், ஹாப்பூர், மதுரா மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களில் விஷ சாராயத்திற்கு பலர் பலியாகி உள்ளனர். விஷ சாராய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறுகிறது? இதற்கு யார் பொறுப்பு? என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!