அரசு மருத்துவமனையில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை தாக்கிய பூனை

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவபிரிவில் புதிதாக பிறந்த குழந்தைகள் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளை அங்கு சுற்றித்திரிந்த பூனை தாக்கியுள்ளது. இதனால் குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய பூனை கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரி கூறுகையில், இந்த வாரத்தில் மருத்துவமனையில் இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை பூனை ஒன்று தாக்கியுள்ளது. பூனை தாக்கிய பச்சிளம் குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளன. பூனையை பிடித்து செல்ல வனத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!