திரிபுராவில் புரு அகதிகளின் மறுவாழ்வு பணிகளுக்கு எதிரான போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு

மிசோ பழங்குடியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மிசோரத்திலிருந்து புரு பழங்குடியின மக்கள் 1997 ஆம் ஆண்டு வெளியேறி திரிபுராவில் தஞ்சமடைந்தனர். இந்த புரு பழங்குடியின மக்கள் திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்குவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, திரிபுரா, மிசோராம் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் புரு பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்தானது. அதன்பின், புரு அகதிகளுக்கான மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது, புரு அகதிகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை கண்டித்து வடக்கு திரிபுரா மாவட்டத்தின் டோலுபரி கிராமத்தில் இன்று ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் எச்சரித்தும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லாதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!