குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண் தொடர்பாக வெளியான தகவல்

இலங்கை தலைநகர் கொழும்பில் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் தப்பி ஓடிய பெண் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 25 வயதுப் பெண் பெரிய அளவில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர் . இவரை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதுடன், பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரது இரண்டரை வயது குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்றிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!