இப்போது மிகவும் சுவையுடன் கூடிய பன்னீர் முந்திரி கிரேவி தயார் செய்வது எப்படி

வீட்டில் சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு எடுத்துக்கொள்ள அம்சமாக இருக்கும் பன்னீர் முந்திரி கிரேவியை எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.

இதற்கு தேவைப்படும் பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கவும்) , கரம் மசாலா – 1 டீஸ்பூன் ,காய்ந்த வெந்தய கீரை இலைகள் – 1 டீஸ்பூன் , எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் , கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன் ,உப்பு – சுவைக்கேற்ப , சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

அரைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:

தக்காளி – 4 (நறுக்கியது) , முந்திரி – 15 , இஞ்சி – 2 இன்ச் , வரமிளகாய் – 4-5

இதனை செய்யும் முறை:

முதலில் ஒரு வாணலியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு பொருட்கள் நன்றாக வெந்ததும், அதை இறக்கி, குளிர வைத்து, பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருஞ்சீரகத்தைப் போட்டு தாளிக்கவும். பின்னர் அரைத்த மசாலாவை ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் கிரேவி நன்றாக கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும். கடைசியாக பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி வைத்தால் , டேஸ்ட்டான பன்னீர் முந்திரி கிரேவி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!