கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய ஆலோசனையில் பிரதமர் மோடி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை வீசுமா என பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விரைவில் கொரோனா தடுப்பூசியை செயல்பட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில், உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசிக்கான சோதனை நடந்து வருகிறது.  பைசர், மாடர்னா, பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

இதில் பைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்கள் கொரோனா சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஒப்புதல் பெறுவதற்காக திட்டமிட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவில், இன்று கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிடுவதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  தடுப்பூசி  உற்பத்தி, அனுமதி, கொள்முதல் குறித்து ஆலோசனை செய்ததாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!