இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : ஒரே நாளில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

சிட்னி,

ஐபிஎல் தொடர் முடிந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.

ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. ஒரே நாளுக்குள் முதல் ஒருநாள் போட்டி தவிர எஞ்சிய 5 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன.

முதலாவது ஒருநாள் போட்டிக்கு மட்டும் இன்னும் சுமார் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறும் மைதானத்தின் மொத்த இருக்கை வசதியில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!