7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து : 2-வது லீக் ஆட்டத்தில்,நார்த் ஈட்ஸ் யுனைடெட் (கவுகாத்தி)-மும்பை சிட்டி எப்.சி. மோதல்

பனாஜி:

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று கோவாவில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதில் பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணி1-0 என்ற கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து இன்று வாஸ்கோவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈட்ஸ் யுனைடெட் (கவுகாத்தி)-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!