ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் : அரையிறுதி சுற்றில் நடால், ஜோகோவிச்

லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் டாப் 8 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடந்த போட்டியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) – சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதிபெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர்.  இதில் 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 9-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் நடால் (ஸ்பெயின்) – மெத்வதேவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா) – டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!