7-வது ஐஎஸ்எல் கால்பந்து : தொடக்க ஆட்டத்தில் கேரளாவை வீழ்த்தியது கொல்கத்தா

பனாஜி:

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று கோவாவில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதில் பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால், முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார்.

ஆனால் அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், ஏ.டி.கே மோகன் பகான் அணி1-0 என்ற கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!