முக்கிய சிறைச்சாலையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தப்பியோடிய கைதி தொடர்பாக கிடைத்துள்ள செய்தி

இலங்கையில் போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்று முன்தினம் இரவு தப்பிச் செல்ல முயற்சித்தனர். அப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் 3 பேரை கைது செய்ததுடன், ஒருவர் கொல்லப்பட்டார். அதோடு ஒரு கைதி தப்பிச் சென்றிருந்தார். அவ்வாறு தப்பிச் சென்றவர் கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த போது கைது வெய்யப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதில் மீண்டும் கைது செய்யப்பட்ட அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தகவல் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!