இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 12 பேர் கைது

இலங்கையில் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தனிப்பட்ட தகராறு ஒன்றே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என தொடக்கநிலை விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் சொல்கின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்துடன் 21 பேர் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!