வாத்தை வேட்டையாடிய 13 அடி நீளமுடைய ராட்சத முதலை – வைரலாகும் வீடியோ

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய இருவரும் நேற்று சென்றிருந்தனர்.அப்போது பிரம்மாண்டமான முதலை ஒன்று தண்ணீரின் மேற்பரப்பில் இருந்த வாத்தை வேட்டையாடியதை கண்டனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக தங்கள் செல்போனில் முதலை வாத்தை வேட்டையாடுவதை வீடியோ எடுத்தனர். பின்னர் தாங்கள் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து, 13 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட முதலை வாத்தை வேட்டையாடிய அந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. …

Read More

பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி

பொங்கலூர்: பல்லடம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). பல்லடத்தை சேர்ந்தவர் சதீஷ் (19). இவர்கள் இருவரும் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் மகாலட்சுமி நகர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். …

Read More

நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவான்மியூர் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்த விசாரணையையும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை வேதிகா – வைரலாகும் புகைப்படம்

நடிகை வேதிகா தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார். அங்கு விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை வேதிகா கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Read More

தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்த மாடர்னா நிறுவனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முழுமையான இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மாடர்னா கொரோனா தடுப்பூசி 94.1 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என உறுதியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான தகவல் என்னெவென்றால் இந்த தடுப்பூசியால் எந்தஒரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மேலும், இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது. மொத்தம் 30 ஆயிரம் பேர்களிடம் நடத்தப்பட்ட இறுதிகட்ட பரிசோதனையின் மூலம் தடுப்பூசி 94.1 சதவிகிதம் செயல்திறன் கொண்டது …

Read More

நிவரைத் தொடர்ந்து புரெவி புயல் – தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி அதன்பின் புயலக உருவெடுத்து நாளைமறுநாள் (டிசம்பர் 2-ந்தேதி) மாலை அல்லது இரவு இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கு 1040 கி.மீட்டர் தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வாக நிலைகொண்டுள்ளது. திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 640 கி.மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் …

Read More

கேரளாவில் புதிதாக 3,382 பேருக்கு கொரோனா பாதிப்புv

திருவனந்தபுரம்: கேரளா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிகையில்:-மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 61 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 55 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 38 ஆயிரத்து 713 …

Read More

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

புதுடெல்லி: அரியானா-டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைற்கிடையில், சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள் இன்று. இதை ஒவ்வொரு ஆண்டும் குருநானக் ஜெயந்தி என்று சீக்கியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு இன்று குருநானக் ஜெயந்தி என்பதால் டெல்லி எல்லையில் போராட்ட களத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலை பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் விவசாயிகள் மெழுகுவர்த்தி …

Read More

வேலூர் அருகே மது விற்பனை செய்த 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டூர் கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த திருமலை (வயது 60) மற்றும் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மதுவிற்ற கே.வி.குப்பம் தாலுகா பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Read More

சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலி

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மகன் வேல்முருகன்(11), அக்காள் மகன் சுதாகர்(18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். மங்களூர் சாலையில் சென்றபோது, சரக்கு வாகனம் ஓன்றும் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை …

Read More