இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? – பிரகலாத்ஜோஷி பதில்

மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் பேட்டி அளித்தபோது, இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் நமது நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்று நாங்கள் சர்வதேச அளவில் எடுத்து கூறி வருகிறோம். இப்போது அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா வலுவான நாடு என்பது பாகிஸ்தானுக்கு தற்போது புரிந்துள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *