இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை ஓய்கிறது

கர்நாடக சட்டசபையில் ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 2 தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இரு தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் நாளைமுடிவடைகிறது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!