நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி

நடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா ஆகியோர் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி அளித்தபோது, பா.ஜ.க.வினர் சினிமா நடிகர்-நடிகைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. சினிமா நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. நடிகர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்பது இல்லை. எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல. மந்திரி அசோக்கிற்கும், சிரா தொகுதிக்கும் என்ன சம்பந்தம்? சிராவில் எத்தனை தொகுதிகள் உள்ளன, மக்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு தெரியுமா? பெங்களூருவில் உட்கார்ந்து கொண்டு சிராவில் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற முடியாது என்று சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு சிரா தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!