முகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள்

முகம்மது நபிகள் குறித்த கார்ட்டூன் விவகாரத்தால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் இமானுவேல் மேக்ரான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில், மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி சாலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த மேக்ரான் படங்கள் மீது வாகனங்கள் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!