ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்த பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்த பிரதமர் மோடியை, முதல்-மந்திரி விஜய் ருபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிலையில் இன்று கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார். முன்னதாக நேற்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *