சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை – ஐசிஏஐ விளக்கம்

சி.ஏ. சேர்வதற்கு, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தற்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே ஆடிட்டர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு (சி.ஏ.) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. தற்போது சி.ஏ. தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து ஐசிஏஐ தனது டுவிட்டர் பக்கத்தில், சி.ஏ. படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒரே ஷிஃப்ட்டில் மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!