சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 31

குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் என்ற ஊரில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிறந்தவர் சர்தார் வல்லபாய் படேல். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இவர், குஜராத் மாநிலத்தில் பிறந்து வழக்கறிஞராக இருந்து பிரிட்டீசாருக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.

இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். காந்தியடிகளின் சத்யாகிரக போராட்டங்களில் கலந்து கொண்டார். தைரியமாக வெள்ளையர்களை எதிர்த்து  சிறை சென்றவர். 1947ல் இருந்து 1950 வரை இந்தியாவின் துணைப்பிரதமராக இருந்தவர்.

1948-ல் இருந்து 1950 வரை உள் துறை அமைச்சராக இருந்தவர். இவர் எல்லோராலும்  இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர். 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *